Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

108 விஷ்ணு கோயில்களை மையமாகக் கொண்டு உருவாகும் ‘நாகபந்தம்’… படப்பிடிப்பை தொடங்கி வைத்த நடிகர் சிரஞ்சீவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நிக் ஸ்டூடியோ தயாரிப்பில் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘நாகபந்தம் : சீக்ரெட் ட்ரெஷர்’ ஆகும். இந்த படத்தில் விராட் கர்ணா நாயகனாக நடிக்கிறார். நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். சவுந்தர் ராஜன் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார், அபே இசையமைப்பாளராகவும் செய்கிறார். இந்த படம் 2025ம் ஆண்டு தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை இணையாக தயாரிப்பதோடு, அபிஷேக் நாமா இப்படத்தை இயக்கவும் செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கப்பட்டன. சிரஞ்சீவி கலாப் அடித்து இப்படத்தை துவக்கி வைத்தார். இப்படம் பற்றி அபிஷேக் நாமா கூறும்போது, ‛‛திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் புதையல் திறக்கப்பட்டதை அடுத்து, பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ரத்ன பண்டாரத்தின் மறைந்துள்ள பொக்கிஷங்கள் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்கள் நாகபந்தம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த படத்தின் கதை, இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்களைச் சுற்றி உருவான நாகபந்தத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அங்கு படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். உலகத் தரத்தில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் மெய்சிலிர்க்கும் பங்களிப்புடன் இப்படம் உருவாக உள்ளது. இது மந்திரம், மர்மம் மற்றும் சாகசங்கள் அடங்கிய புதிய சாம்ராஜ்யத்தை அடையாளப்படுத்தும் ஆழமான பயணத்தை நமக்கு வழங்கும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News