மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் துல்கர் சல்மான், சமீபத்தில் தெலுங்கு இயக்குநர்களின் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்த பான் இந்தியா படங்கள் சீதா ராமம், லக்கி பாஸ்கர் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன.
இந்த நிலையில், ஷேன் நிகாம், அந்தோனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவன் நடித்து ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்ற “ஆர்.டி. எக்ஸ்.” படத்தை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் புதிய படத்தில் துல்கர் சல்மான் நடிக்கின்றார்.
இந்தப் படத்திற்கு “ஐயம் கேம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மீண்டும் அந்தோனி வர்கீஸ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.