Saturday, January 4, 2025

என் வாழ்க்கையை சரியாக வடிவமைத்தது என் தாய்தான்-பழம்பெரும் நடிகை ஹேமமாலினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானாலும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், ஹிந்தி திரையுலகில் சென்று கனவுக்கன்னி என புகழடைந்தவர் நடிகை ஹேமமாலினி. தஞ்சாவூர் மாவட்டத்தின் அம்மன்குடி என்ற ஊரில் பிறந்த அவர், 1963ம் ஆண்டு வெளியான ‘இது சத்தியம்’ என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அந்நாளைய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஹேமமாலினியின் திறமையை கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால், ஹிந்தி திரையுலகில் 1970களில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தனது அம்மா ஜெயலட்சுமியின் பிறந்த நாளை முன்னிட்டு, நெகிழ்ச்சியான பதிவொன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். “ஆண்டின் இந்த நாள் என் இதயத்துக்கு மிக நெருக்கமானது. என் அன்பான அம்மாவின் பிறந்த நாளை நான் எப்போதும் மறக்கவில்லை. அவர் எனக்காக செய்த அனைத்துக்கும் நன்றி.

அவரது அற்புதமான ஆளுமையும் சினிமா துறையிலும் அதற்கும் அப்பாலும் அவர் உருவாக்கிய நல்ல முறையும் தான் என் வாழ்க்கையை வடிவமைத்தது. நான் இன்று யார் என்பதை அவரே உருவாக்கினார். நன்றி அம்மா, உங்களை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டு, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News