Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

என் காதல் சில கண்டிஷன்கள் உடையது… மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவருடைய சமீபத்திய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. குறிப்பாக, “லைகர்” மற்றும் “தி ஃபேமிலி ஸ்டார்” போன்ற படங்கள் பெரிதாக வெற்றியடையவில்லை.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா, சஹிபா எனும் இந்தி ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார். இந்த பாடல் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், அவர் தனது காதல் வாழ்க்கையைப் பற்றி திறந்த மனதுடன் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில், அவர் நகைச்சுவையாக “எனக்கு 35 வயதாகிறது; நான் இன்னும் சிங்கிளா இருக்கிறேன் என நினைக்கிறீர்களா?” என்று கூறினார். மேலும், “என்னுடன் நடித்த சில நடிகைகளை நான் டேட் செய்துள்ளேன் என ஒப்புக்கொள்கிறேன். காதலிக்கப்படுவதன் உணர்வு என்ன என்பது எனக்கு தெரியும். ஆனால், என்னுடைய காதல் அன்கண்டிஷனல் காதல் அல்ல; அது சில கண்டிஷன்களுடன் தான் இருக்கும்,” என்றார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து, ஒன்றாக டேட் செய்து வருகின்றனர் என்கிற செய்தி “டியர் காமரேட்” படத்தின் வெளியீட்டுக் காலத்திலிருந்தே பரவி வருகின்றது. அவர்கள் இருவரும் பொதுவாக ஒன்றாக பழகுவது, சமீபத்தில் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து தெலுங்கு திரையுலகின் ஆடைவடிவமைப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்டது போன்ற நிகழ்வுகள், ரசிகர்கள் மத்தியில் இவர்களுடைய காதல் உறவை உறுதிப்படுத்துகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவர்களது தரப்பிலிருந்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News