தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படம் ‘இட்லி கடை’. இந்த படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், பிரிகிடா சாகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யராஜ், “நீண்ட நாட்களாக தனுஷ் சார் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இந்தப் படத்தில் நிறைவேறியது. அவர் ஒரு நடிகராக பல விருதுகளை வென்றவர்.
ஆனால் இயக்குநராக அவருடன் பணிபுரிந்த பிறகே அவரது தன்மையை உணர முடிந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமாகவும் கவனமாகவும் செயல்படுகிறார். அதுவே அவருடைய வெற்றிக்கு காரணம்” என்று தெரிவித்தார்.