Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

வா வாத்தியார் படத்தில் என் கதாபாத்திரம் வித்தியாசமானது… அப்டேட் கொடுத்த நடிகர் சத்யராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறியப்படும் கார்த்தி, இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான ‘மெய்யழகன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. அதே நேரத்தில், அவர் ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 26வது படமான இந்த படத்திற்கு ‘வா வாத்தியார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லனாக, நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் சத்யராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் ‘வா வாத்தியார்’ படத்தைப் பற்றி பகிர்ந்தார்.

அப்மபோது அவர், இந்த படத்தில் நான் வித்தியாசமான வில்லனாக நடித்துள்ளேன். இரண்டு ரோல்களில் நடித்துள்ளேன். டீசரில் ஒரு கெட்டப்தான் காண்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News