விஜய் நடித்த ஜில்லா மற்றும் வேலாயுதம் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய டி.ஆர்.பாலா தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் பிரபலமான நடிகர் முகேன் ராவை வைத்து ஜின் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக ஜோ திரைப்பட புகழ் பவ்யா திரிகா நடிக்கிறார். மேலும், பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து நடிகை பவ்யா திரிகா கூறுகையில், இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பிரியா. இது என்னை முழுமையாக பிரதிபலிக்கிறது. ஏனென்றால், பிரியா ஒரு இனிமையானவளும் அக்கறையுள்ளவளும் ஆவாள். நானும் அப்படித்தான். பிரியா என்பது பொதுவான பெயர் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்படத்தில் எனது கதாபாத்திரம் தனித்துவமிக்கதாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.