Friday, January 17, 2025

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த இசைஞானி இளையராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தனது இசை பயணத்தில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்‌ இன்றும் இசையின் ராஜாவாக வலம் வருகிறார் இளையராஜா.

அன்று முதல் இன்று வரை, இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை. தனது தனித்துவமான இசையால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில், இளையராஜா சமீபத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும், அவரது இசையில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.அதேபோல், அண்மைக் காலங்களில் வெளியான பல திரைப்படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News