Tuesday, January 21, 2025

தனது அடுத்த இன்னிசை கச்சேரிக்கான அறிவிப்பை வெளியிட்ட இசைஞானி இளையராஜா… ரசிகர்கள் உற்சாகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், 7,000 பாடல்களை எழுதி இருக்கிறார். அவர் இசையமைத்த காலத்திலிருந்து இன்று வரை அவரது இசைமயக்கம் மக்களை விட்டு விடவில்லை. தனித்துவமான இசைநயத்தால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார்.

இளையராஜா இசைக்கச்சேரிகள் நடத்துவதில் புகழ்பெற்றவர். கடந்த 17ஆம் தேதி, திருநெல்வேலியில் அவர் நடத்திய இன்னிசை கச்சேரி வெற்றிகரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விரைவில் வேறு இடங்களிலும் தனது இசைக்கச்சேரிகளை நடத்துவேன் என அவர் அறிவித்தார்.

இந்நிலையில், அடுத்த இன்னிசை கச்சேரிக்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். தனது பதிவில், “சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்… உங்களை எல்லாம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News