பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் 2016ல் வெளியான படம் ஒப்பம். படம் முழுவதும் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக மோகன்லால் நடித்திருந்தாலும், இது ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது. சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தை ஹைவான் என்கிற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் பிரியதர்ஷன். இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடிக்க, சமுத்திரக்கனி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது எர்ணாகுளத்தில் நடைபெறுகிறது.இப்படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் அது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கும் என்று இயக்குனர் பிரியதர்ஷன் கூறியுள்ளார்.
