தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சிக்கந்தர் படத்தைத் தவிர, இந்த ஆண்டு வெளியான ‘சாவா’, ‘குபேரா’, ‘தம்மா’ உள்ளிட்ட படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்நிலையில், நேற்று அவரது ஐந்தாவது படமான ‘தி கேர்ள் பிரண்ட்’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா கலந்து கொண்டார்.
சமீபத்தில், ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ‘ஜெயம்மு நிச்சயயம்முரா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ஜெகபதி பாபு, “ஆண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலி வந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேட்டார்.அதற்கு ராஷ்மிகா “ஆம்” என பதிலளித்தார். மேலும், “பெண்கள் ஒவ்வொரு மாதமும் அனுபவிக்கும் அந்த வலியை ஆண்களும் ஒரு முறை அனுபவிக்க வேண்டும்” என்று கூறினார். அவரது இந்தக் கருத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பரவலான விவாதத்துக்குள்ளாகி வருகிறது.

