ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதன் பிறகு லவ் டுடே படத்தை இயக்கி, அதே படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டிராகன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் பிரதீப் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார்.

மமிதா தமிழில் ஏற்கனவே ரெபெல் படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் நடித்து வரும் 69வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தை சுதா கெங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.