மலையாள சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில், மம்முட்டி மற்றும் மோகன்லால் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். முன்னர் அவர்கள் “அதிராத்ரம்” (1984), “அனுபந்தம்” (1985), “வர்தா” (1986), “கரியில காட்டு போல” (1986), “அடிமகள் உடமகள்” (1987), “ஹரிகிருஷ்ணன்ஸ்” (1998) போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக அவர்கள் 2008ஆம் ஆண்டு வெளியான “டுவென்ட்டி” படத்தில் இணைந்து நடித்தனர். சமீபத்தில் “மனோரதங்கள்” என்ற அந்தாலஜி படத்தில் நடித்தனர், ஆனால் அதில் அவர்கள் இணைந்து நடிக்காமல், தனித்தனி கதைகளில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்கள் மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். “டேக் ஆப்”, “சியூ சூன்”, “மாலிக்” போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் இது அவர்களின் 8வது படம் ஆகும்.