மலையாளத் திரையுலகத்தில் உள்ள முக்கிய சங்கங்களில் ஒன்றான கேரளா திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஜுன் 1ம் தேதி முதல் மலையாளத் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் நடிகர்களின் சம்பளம், கேளிக்கை வரி ஆகியவற்றை முன்னிறுத்தி அந்த ஸ்டிரைக் நடைபெற உள்ளது.இந்நிலையில் மலையாளத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் நடத்தும் இந்த ஸ்டிரைக்குக்கு ‘அம்மா’ ஆதரவு தராது,” என அறிவித்துள்ளனர். சங்கத்தின் ‘அட்-ஹாக்’ கமிட்டி அதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. ஏற்கெனவே மலையாளத் திரையுலகம் நிதிச் சிக்கலில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சில தனி நபர்கள் நடத்த முயற்சிக்கும் இந்த ஸ்டிரைக் தேவையில்லாதது, பல சினிமா ஊழியர்களையும் இது பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
