Friday, October 18, 2024

எதிர்பார்ப்பை தூண்டும் சசிகுமார் நடித்துள்ள ஃபிரீடம் படத்தின் கிளிம்ஸ் அப்டேட் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சசிகுமார் தற்போது தனது முழு கவனத்தை நடிப்பில் செலுத்தி வருகிறார். இவரின் நடித்திருந்த “கருடன்” திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் வெளியான “நந்தன்” படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

இந்த திரைப்படம் தாழ்த்தப்பட்ட மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சசிகுமார் இதில் மிகவும் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியானதும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதற்குப் பின், அவர் இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜயா கணபதி ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் “ஃபிரீடம்” எனும் புதிய படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் லிஜோமோல் நாயகியாக நடித்துள்ளார். இதன் முதல் காட்சிகளுக்கான வீடியோ வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அந்த அப்டேட் வீடியோவில், ஒரு லாரியில் கைகள் கட்டப்பட்டு, ஒரு கூட்டம் மக்கள் அடர்ந்த காட்டிற்குள் அழைத்து செல்லும் சில நொடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் படம் குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News