நடிகர் ஷாருக்கான் தன்னுடைய சொகுசு பங்களாவிற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையாக அதன் மதிப்பில் 25 சதவீதம் தொகையை அதாவது 27.5 கோடி ரூபாயை அரசுக்கு வரியாக செலுத்தி இருந்தார்.ஆனால் பின்னர் அவர் வரி கணக்கை சரிபார்த்த போது தன்னிடம் கூடுதலாக வசூலித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வழியாக மஹாராஷ்டிரா அரசுக்கு தகவல் தெரிவித்தார் ஷாருக்கான். அதனை ஆய்வு செய்த மும்பை அரசு ஷாருக்கான் 9 கோடி ரூபாய் கூடுதலாக செலுத்தி இருப்பதை கண்டுபிடித்துள்ளதுடன் விரைவில் அந்த தொகை ஷாருக்கானுக்கு திருப்பி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
