Thursday, January 9, 2025

‘மதகஜராஜா’ படத்தின் கலாட்டா கிளிம்ஸ் வெளியீடு… எண்டர்டெயின்மெண்ட் கொடுக்க காத்திருக்கும் விஷால் சந்தானம் கூட்டணி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தொடர்ந்து ‘சண்டக்கோழி’, ‘தாமிரபரணி’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கி, முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அவர் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் 2013-ம் ஆண்டு உருவான படம் ‘மதகஜராஜா’. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த ‘மதகஜராஜா’, இப்போது வருகிற 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் புதிய டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.இந்த சூழலில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது‌ ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News