மலையாள திரையுலகில் பிரேமம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை மடோனா செபாஸ்டியன். அந்த வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

அனிமல் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக பிரபாஸை கதாநாயகனாக வைத்து ஸ்பிரிட் எனும் படத்தை இயக்குகிறார்.
இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். ஏற்கனவே இதில் கதாநாயகியாக த்ரிப்தி டிம்ரி நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மிருணாள் தாக்கூர், சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். தற்போது இவர்களுடன் சேர்ந்து மடோனா செபாஸ்டியனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் வெளியாகியுள்ளது.