ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது அடுத்த படத்தை நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். கடந்த ஆண்டிலிருந்து இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரித்விராஜ் இணைந்து நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் அட்வென்ச்சர் கதைக்கருவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கான லொகேஷன் தேடும் பணிகளில் ராஜமவுலி ஈடுபட்டு வருவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.