Touring Talkies
100% Cinema

Friday, April 4, 2025

Touring Talkies

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தி சினிமாவின் பழமையான முன்னணி நடிகர்களில் ஒருவர் மனோஜ் குமார். அவருடைய வயது 87. இவர் 1937ம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிறந்தவர். பெரும்பாலும் நாட்டுப்பற்றுடன் கூடிய கதைகளில் நடித்தும், இயக்கியுமானது மூலம் பெரிதும் புகழ் பெற்றவர். இவரை மக்கள் ‘பரத் குமார்’ என்றழைத்து வந்துள்ளனர்.

‘புராப் அவுர் பஸ்ஜிம்’, ‘கிரான்டி’, ‘ரொட்டி, காபாடா அவுர் மாகான்’, ‘யாத்கார்’, ‘பெஹ்சான்’, ‘மேரா நாம் ஜோக்கர்’ ஆகிய பல வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனிச்சாதனையை ஏற்படுத்தியவர்.

1992ஆம் ஆண்டு, அவருக்கு பத்மஸ்ரீ விருது மற்றும் 2015ஆம் ஆண்டு, இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை மத்திய அரசு வழங்கி அவரை கௌரவித்துள்ளது.பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்த மனோஜ் குமார், வயது காரணமாக பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News