Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இந்த படத்தோடு LCU நிறைவடையும்… லியோ 2 விஜய் அண்ணா ஓகே சொல்லியிருந்தால் எடுத்திருப்பேன் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தங்க கடத்தலை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரை அளவுக்கு அதிகமாக அழைக்கழிக்காமல், இந்த படத்தை இன்டோரில் நிறைவு செய்ய லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், கைதி படம் வெளியானது மற்றும் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது, அதற்கான உறவாடல்கள் அனைவரும் வளர்ந்துள்ளதாகவும், டில்லியின் மகள் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கோ சம்பந்தமாக, கைதி 2 படமும் உருவாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படமும் எல்.சி.யூ-ல் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்தகைய படங்கள் அனைத்தும் போதைக்கு எதிரானவை என்றும், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் இந்த போதைக்கு எதிரானவர்கள் என்று கூறினார். மார்வெல் மற்றும் டிசி எனக்கு மிகவும் பிடிக்கும், அது தான் எனக்கு ஊக்கம் அளிக்கிறது; ஆனால் அவற்றில் உள்ள கதாபாத்திரங்களுக்கு சூப்பர் பவர் உள்ளது. ஆனால் நாம் மனிதர்களுக்கு எமோஷன் தான் உள்ளது. ஒவ்வொரு படத்திலும் அதிக ஆக்ஷன் இருக்கும் என்றும், அடுத்ததாக கைதி 2 மற்றும் ரோலக்ஸ் என்ற படங்களை இயக்க இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார். ‘விக்ரம் 2’ படம் எல்.சி.யுடன் முடிந்து விடும் என நம்புகிறேன் என்றார். மேலும், விஜய் சார் ‘லியோ 2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால், அந்த படத்தை இயக்கி இருப்பேன் என்றும் கூறினார்.

- Advertisement -

Read more

Local News