மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு, மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு மோகன்லால் நடிப்பில் ‘ப்ரோ டாடி’ என்ற மற்றொரு படத்தையும் இயக்கியுள்ளார்.

தற்போது, ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிய ‘L2: எம்புரான்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் மார்ச் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. தற்போது படக்குழு புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த சூழலில், பிருத்விராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பை பற்றிய தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், L2: எம்புரான்’ படத்தின் டிரைலரை முதன்முதலில் பார்த்த நபர் ரஜினிகாந்த். அது பார்த்த பிறகு அவர் சொன்ன வார்த்தைகளை நான் என்றும் மறக்கமாட்டேன். இந்த உலகம் எனக்கானது இதுவே என உணர்கிறேன். என்றும் உங்கள் ரசிகன். ஓ.ஜி சூப்பர்ஸ்டார்! என்று குறிப்பிட்டுள்ளார்.