கேஜிஎப் திரைப்படத்தில் ஹரிஷ் ராய் நடித்த ஒரு முக்கிய பாத்திரத்தின் பெயர் சச்சா. இவரது இந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. கடைசியாக கன்னட நடிகரான இவர் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஓம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பல படங்களில் நடித்துள்ள ஹரிஷ் ராய் கடுமையான உடல் நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


