Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் கேரளத்து மாடல் அழகி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரளாவில் முன்னணி மாடலாக இருந்த ரோஸ்மின் 2022 ஆம் ஆண்டு ‘மிஸ் மலபார்’ பட்டத்தை வென்றார். அதன்பின் 2023 ஆம் ஆண்டு நடந்த ‘மிஸ் குயின் கேரளா’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார் மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2023 போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றார். பின்னர் சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார்.

திலீப் நடித்த சமீபத்தில் வெளியான ‘பவி கேர் டேக்கர்’ திரைப்படத்தில் தனது அறிமுகத்தைச் செய்த ரோஸ்மின், தற்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பிரேக் பாஸ்ட்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடிக்கும் அனுபவத்தைப் பற்றி அவர் கூறியதாவது, சில அனுபவங்கள் வார்த்தைகளில் அடங்காது. எனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருப்பதால் பெருமை கொள்கிறேன். கோலிவுட்டில் எனது பயணத்தைத் தொடங்கிய காந்தி கிருஷ்ணா இயக்குநருக்கு இதற்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படவாய்ப்பு என் திறமைகளை வெளிப்படுத்த மட்டுமல்லாமல், பல புதிய விஷயங்களையும் கற்றுத் தந்தது என்றார்.

- Advertisement -

Read more

Local News