
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய ஒரு பேட்டியில், இந்த லவ் அண்டர் கன்ஸ்ட்ரக்சன் வெப்சீரிஸ் பற்றி சில விஷயங்களை நான் சொல்லியே ஆக வேண்டும். மென்மையான கதை அம்சம் கொண்ட, நகைச்சுவை கலந்த, அதேசமயம் அழகான உணர்வுபூர்வமான ஒரு கதையாக இதை கொடுத்திருக்கிறார்கள். விஷ்ணு ராகவ் அருமையான திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக பப்பேட்டன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் அஜு வர்கீஸ் ஒரு கலகமே செய்திருக்கிறார். கவுரி கிஷன் தனது கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக இந்த வெப் சீரிஸ் முழுவதும் கொண்டு சேர்ந்து இருக்கிறார். இந்த பீல்குட் வெப் சீரிஸ் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.