மாருதி இயக்கத்தில் பிரபாஸ் ‘தி ராஜா சாப்’ எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது. 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபாஸ் உடன் இணைந்து ‘கயல், பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்களில் நடித்த கயல் ஆனந்தி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


