Thursday, February 6, 2025

இறுதிக்கட்ட நோக்கி நகர்ந்த கவினின் மாஸ்க் திரைப்படம்… வெளியான புது தகவல்!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதற்கிடையில், கவின் தற்போது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்க, படத்திற்கு ‘மாஸ்க்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கவினுடன் நடிகை ஆண்ட்ரியா முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏற்கெனவே இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு, மிகுந்த வேகத்தில் நடைபெற்று வந்தது.தற்போது, இப்படம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படக்குழு, ‘மாஸ்க்’ திரைப்படத்தை வரவிருக்கும் மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News