கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் ‘ரெட்ரோ’. இந்தப் படம் வரும் மே 1 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கனிமா’ என்ற குத்துப் பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. 90களில் நடைபெறும் ஒரு திருமணக் காட்சி பின்னணியில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே ‘இன்ஸ்டன்ட் ஹிட்’ ஆகி, யூட்யூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்துவிட்டது.
பாடலின் வித்தியாசமான நடன அமைப்பு, சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் அசத்தலான நடனம் போன்ற அம்சங்கள் பாடலை மிகவும் பிரபலமாக்கியுள்ளது. இந்த வரவேற்பு படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.