Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கங்குவா திரைப்படம் வட இந்தியாவில் மட்டும் 3500 ஸ்கிரீன்களில் ரிலீஸாகிறது… தயாரிப்பாளர் சொன்ன மாஸ் அப்டேட்! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிந்து வரும் இப்படம், 38 மொழிகளில் 3டி வடிவில் உலகம் முழுவதும் வெளியிடப்படும். இப்படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கங்குவா திரைப்படத்தை வரும் நவம்பர் 14-ஆம் தேதி வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதேபோல, படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “படத்தின் அடுத்த அப்டேட் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும். சிறுத்தை சிவா சூர்யாவிற்கு மிக வலிமையான ஒரு டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளார். சூர்யா 8 மொழிகளில் தானே குரல் கொடுத்துள்ளார், மற்ற மொழிகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் டப்பிங் செய்துள்ளோம். வட இந்தியாவில் 3500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News