சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘கங்குவா’. இது சரித்திரகாலமும் தற்போதைய காலமும் ஒன்றிணைந்த கதையம்சத்தில் உருவானது. சிறப்பான தயாரிப்பும், பிரமாண்டமான மேக்கிங்கும் இருந்தாலும் இந்த படம் வணிகரீதியாக தோல்வியை சந்தித்தது.
இருப்பினும் 2025ல் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது போட்டிக்காக இந்தப் படத்தை விண்ணப்பம் செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து மலையாளப் படமான ‘தி கோட் லைப்’ மற்றும் ‘கேர்ல்ஸ் வில் பி கேர்ல்ஸ்’ ஆகிய படங்களும் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில் தேர்வாகும் படங்கள் அதிக அளவிலான வாக்குகளைப் பெற வேண்டும். வாக்களிப்பு ஜனவரி 8ம் தேதி தொடங்கி, 12ம் தேதியுடன் முடிவடைகிறது. பின் எந்த படங்கள் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது என்பது ஜனவரி 17ம் தேதி அறிவிக்கப்படும்.