தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் திறமையாக நடித்தவர் பிரியதர்ஷி புலிகொண்டா. இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் தெலுங்கில் நானி தயாரித்த‘கோர்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தமிழ் சினிமா குறித்து மனம் திறந்து பேசினார் அதில், ஷங்கர் சார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்க முடிந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சினிமாவில் என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் கமல்ஹாசன் சார். அவர் எனது மிகப்பெரிய இன்பிரேஷன். அவருடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக எனக்குள் உள்ளது. அதே போல் மணிரத்னம் சார், பா. ரஞ்சித் சார், வெற்றிமாறன் சார் ஆகியோரது படங்களில் நடிக்க வேண்டும் என்பதும் எனது பேராசை.
பா. ரஞ்சித் சார் எனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்திய ஒரு சிறந்த இயக்குனர். அவர் ஒரு சமூகநல அக்கறையுடன் செயல்படும் ஒரு மனிதர். அவரின் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதும் என் மிகப்பெரிய விருப்பம் என கூறினார்.