பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் சலார் மற்றும் கல்கி 2898 ஏடி ஆகியவை. இந்த வெற்றிகளை தொடர்ந்து, தற்போது அவர் பல முக்கியமான புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார்.

அதன்படி, பிரபாஸ் தற்போது ஸ்பிரிட், சலார் 2, மற்றும் தி ராஜா சாப் உள்ளிட்ட பெரும் படங்களில் நடித்துவருகிறார். இதில் குறிப்பிடத்தக்கது, ஸ்பிரிட் திரைப்படம் அவருடைய 25வது திரைப்படமாகும். இந்தப் படத்தை, அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பணியாற்றவுள்ளார்.
இந்தப் படத்தில் பிரபாஸ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதற்குமுன், மிருணாள் தாகூர் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கு இணையாக, தற்போது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இப்படத்தில் இணைவதாக கூறப்படுகிறது.இதற்கு முன்பு, கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் பிரபாஸ், மிருணாள் தாகூர் மற்றும் தீபிகா படுகோனும் ஒரே படத்தில் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.