Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரபலங்களின் கால்ஷீட்-காக காத்திருக்கும் கல்கி 2 பட இயக்குனர் நாக் அஸ்வின்!!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’ மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகியது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ.1,100 கோடிக்கும் மேல் வசூலித்ததால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து, ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது அதன் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் நாக் அஸ்வின், இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் மற்றும் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், பிரபாஸ் ஆகியோரின் கால்ஷீட்டுகள் தேவையாக இருப்பதால் இதற்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News