கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘தேவரா’. சுமார் 500 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம், ஜப்பான் நாட்டில் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதற்காக படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவாவும், ஜுனியர் என்டிஆரும் ஜப்பான் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேட்டிகள் அளித்து வருகின்றனர். நேற்று ரசிகர்களுக்காக ஒரு பிரீமியர் காட்சி நடைபெற்றது. ஜப்பான் ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து திரையரங்கை நிரப்பினர்.
அப்போது சில ஜப்பான் ரசிகர்கள் மேடையில் ‘தேவரா’ பாடலுக்கு நடனமாடினர். அவர்களுடன் ஜுனியர் என்டிஆரும் இணைந்து நடனமாடினார். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் அதை வரவேற்றனர். ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்கள் ஜப்பானில் நல்ல வசூலைப் பெற்றன. அதேபோல ‘தேவரா’ படமும் சிறப்பாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.