பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்தவர் வாமிகா கபி. தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ மற்றும் ‘இரவாக்காலம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ‘ஜீனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனுடன், பான் இந்தியா திரைப்படமாக தயாராகி வரும் ‘ஜி2’ படத்தில், ரகசிய உளவு பிரிவு ஏஜெண்டாக நடிக்கிறார். இப்படத்தில் ஆதவ் சேஷ் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஷ்மி நடிக்கிறார்.
இவர்களுடன் முரளி சர்மா, சுப்ரியா யர்லகட்டா மற்றும் மது ஷாலினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரிக்கின்றனர்.
படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து வாமிகா கபி கூறியதாவது, “இந்த படத்தில் நான் ‘உளவு ஏஜெண்ட் 116’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஐரோப்பிய நாட்டில் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் சதிகளை முறியடிப்பது போன்ற கதையம்சம் கொண்டது. ‘ஜி2’ எனும் அற்புதமான திரை அனுபவத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளேன். இந்த ஸ்பை உலகில் அடியெடுத்து வைக்கும் அனுபவம் மிகவும் சவாலானதொன்றாக இருந்தது. மிகச்சிறந்த நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் சேர்ந்து பணிபுரிந்தது எனது கதாபாத்திரத்திற்கு புதுசு வாய்ந்த ஆற்றல்களை வழங்க உதவியாக அமைந்தது, என்றார்.