நடிகர் பிரியாமணி தென்னிந்திய சினிமாவிலும், ஹிந்தி சினிமாவிலும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார் பிரியாமணி. தற்போது விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக அவர் மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’ படத்தில் விக்ரமின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் மணித்னம் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர், “தமிழ் சினிமாவைச் சேர்ந்த என் ‘பருத்தி வீரன்’ படத்தின் முத்தழகு கேரக்டர் இன்னும் ரசிகர்களின் மனதில் நிற்கிறது. அதுபோல ஆழமான, உணர்ச்சி மிகுந்த கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு உண்டு, என தெரிவித்தார். மேலும், மணிரத்னம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவர் அழைத்தால், என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் நடிக்கத் தயாராக இருக்கிறேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை என் வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதுவேன். அவரைப் போன்ற இயக்குனரின் படத்தில் நடிப்பது என் போன்ற நடிகைகளுக்கு ஒரு அரிய ஆசீர்வாதம்,” என்று கூறியுள்ளார்.

