இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது பெற்றவருமான ஏர்.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். இதனால் அவர்களது 29 வருடமான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த பிரிவை பற்றி பல்வேறு கருத்துக்கள் வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பரவி வரும் தந்தை மற்றும் தாய் பற்றி கடுமையான அவதூறுகள் குறித்து அவர்களின் 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமீன் தனது பதிவில் கூறியுள்ளதாவது: “என் தந்தை ஒரு லெஜெண்ட். திரைத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்புகள் மட்டுமல்ல, கடந்த எத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட். ஆதாரமற்ற மற்றும் பொய்யான சில வதந்திகள் பரவுவது மனமுடைக்கிறது. ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும். அவரது கண்ணியத்தை மதித்து அதை காக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே!” என்று தெரிவித்தார்.