Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

உங்களுக்கு பார்க்கும் மாப்பிள்ளை சினிமாத்துறையை சேர்ந்தவரா? அதுதான் எல்லாருக்கும் தெரியுமே…ராஷ்மிகா ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘நோட்டா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவருடைய சில தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால், தமிழ்நாட்டில் அவருக்குப் பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. ‘வாரிசு’ படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா காதலிக்கின்றனர் என்ற செய்தி கடந்த சில வருடங்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இருப்பினும், இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக காதல் உறவை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த இடத்தில், இருவரும் சுற்றுலா சென்றதாகவும், ராஷ்மிகா தீபாவளியை விஜய் தேவரகொண்டா வீட்டில் கொண்டாடியதாகவும் செய்திகள் வந்துள்ளன. தற்போது, இருவரும் ஒரு ஹோட்டலில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ நிகழ்ச்சியில், ராஷ்மிகா பேசும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம், உங்களுக்கு மாப்பிள்ளை சினிமாத் துறையா, வெளியில் உள்ளவரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ராஷ்மிகா, இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் என்று சிரித்தபடி பதிலளித்தார். அவரது பதிலைக் கேட்டு அல்லு அர்ஜுன், ஸ்ரீ லீலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் மகிழ்ச்சியுடன் சிரித்தது கவனம் பெற்றது.

- Advertisement -

Read more

Local News