2011ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டு இன்று வரை அது உருவாகவில்லை.
சமீபத்தில், கவுதம் மேனன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. இதுகுறித்த கூடுதல் தகவலின்படி, விஷாலை வைத்து உருவாகும் இந்த படம், ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படத்தின் கதைதான் என கூறப்படுகிறது. தற்போது இந்த கதையில் காலத்திற்கேற்ப நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.