தமிழில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். கடைசியாக, அவரின் இயக்கத்தில் சங்கத்தமிழன் படம் வெளியானது.
இந்தப் படம் வெளியானதற்கு பிறகு, சுமார் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. இதுவரை அவரின் அடுத்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியானதில்லை.
தற்போது, விஜய் சந்தர் தனது அடுத்த படத்திற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலிடம் ஒரு கதையை எடுத்துரைத்துள்ளார். இந்தக் கதை மோகன்லாலுக்கு மிகவும் பிடித்ததால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.