Friday, September 27, 2024

டிசம்பர் மாதத்தை டார்கெட் செய்கிறதா வீர தீர சூரன்? #VEERA DHEERA SOORAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, மற்றும் சுராஜ் இணைந்து நடிக்கும் படம் வீர தீர சூரன். இப்படம் இரு பாகங்களாக உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

தங்கலான் படத்தின் வெற்றியால், விக்ரமின் வீர தீர சூரன் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இப்படத்திற்காக, 10 நாட்கள் ஒத்திகை நடத்தப்பட்ட முக்கிய காட்சியை எடுத்ததாக, நடிகர் எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் அருண்குமாரைப் புகழ்ந்தார்.மேலும் மீதி காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீர தீர சூரன் படம் டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை-2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களுடன் இணைந்து வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News