Monday, September 30, 2024

வேதாளம் பட வில்லன் குட் பேட் அக்லி படத்தில் இணைகிறாரா? #GoodBadUgly

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். திரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதற்கிடையில், இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் நடிக்க உள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே மழை, வேதாளம், ஆதவன், முனி போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நகரில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஸ்பெயின் சென்று லொக்கேஷன் தேர்வு செய்து வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News