சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான காமெடி கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றவை. இதுவரை, சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து மூன்று திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர். ‘வின்னர்’ படத்தில் கைப்புள்ள, ‘தலைநகரம்’ படத்தில் நாய் சேகர், ‘நகரம் மறுப்பக்கம்’ படத்தில் ஸ்டைல் பாண்டி ஆகிய கதாபாத்திரங்கள், இன்றுவரை ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் காமெடி பாத்திரங்களாக உள்ளன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158571.jpg)
தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த பிரபல கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படம் ‘கேங்கர்ஸ்’ என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158572.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158570.jpg)
தற்போது, இந்த காமெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் வடிவேலு 5 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது முக்கியமான அம்சமாகும். குறிப்பாக, ஒரு கதாபாத்திரம் லேடி கெட்டப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சில திரைப்படங்களில் வடிவேலு லேடி கெட்டப்பில் நடித்துள்ளார். இதனால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.