சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி உருவாகி வருகிறது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்திருக்கிறார். படத்தில் ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது, மேலும் ரசிகர்கள் அதை வெகுவாக வரவேற்றனர். ஏற்கனவே இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். தற்போது மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அவருடைய சமீபத்திய மலையாள படம் மார்க்கோ மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சீடன், கருடன் போன்ற நேரடி தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..