நடிகர் கமல்ஹாசன், தனது படங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்குவதில் தொடர்ந்து ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். மணிரத்னம் இயக்கியுள்ள தக்லைப் படத்தில் தனது நடிப்பை முடித்த பிறகு, தற்போது அமெரிக்கா சென்றுள்ள அவர் அங்கு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயின்று வருகிறார்.
தொடர்ந்து, ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கவிருக்கும் தனது 237வது படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் சினிமா உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக அதிநவீன தொழில்நுட்பம் ஒன்றை கமல் அறிமுகப்படுத்தப்போகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த காரணத்திற்காகவே தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இதனால், கமலின் 237வது படம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு புதியதாகவும் வியக்கத்தக்கதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.