கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் அவரது 44வது படத்திற்கு ‘ரெட்ரோ’ என்ற பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்பின், சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், ‘மௌனம் பேசியதே’ மற்றும் ‘ஆறு’ படங்களுக்கு பிறகு, திரிஷா மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என்கிற தலைப்பை வைக்க ஆர்.ஜே. பாலாஜி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் பொங்கல் திருவிழாவின் போது வெளியிடப்படும் என்றும் அப்போதே படத்தின் தலைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன், ரஜினிகாந்த் ‘பேட்ட’ என்ற படத்திலும், விஜய் ‘வேட்டைக்காரன்’ என்ற படத்திலும் நடித்த நிலையில், தற்போது சூர்யா நடித்துள்ள படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என்ற தலைப்பை வைத்திருப்பது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.