தெலுங்கு திரையுலகில், ரவி தேஜா நடித்து வெளியான ‘மிஸ்டர் பச்சான்’ திரைப்படத்தின் மூலம் புகழடைந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது ராம் பொத்தினேனி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, பிரபல இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தமாகியிருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இது நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படமாகும்.

இந்த திரைப்படம், இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட இன்ஜின் பற்றிய கதையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இயக்குனர் வெங்கி அட்லூரி, படத்திற்குப் ‘760 சிசி’ என பெயர் சூட்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.