இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று போன்ற வெற்றி படங்களை இயக்கிய சுதா கொங்கரா, அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தை இயக்குகிறார்.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்கவிருக்கிறார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா குணசேகரன் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் கவனிக்கிறார்.

முதலில், இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தபோது, சுதா கொங்கரா படத்துக்கு ‘புறநானூறு’ என்ற தலைப்பை தேர்வு செய்திருந்தார். ஆனால், தற்போது, படத்திற்கு ‘1965’ என புதிய தலைப்பை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 1965 காலகட்டத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால், அந்த தலைப்பைத் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.