சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் நந்தன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃப்ரீடம் படக்குழு சிறப்பு காட்சிகள் வீடியோவை வெளியிட்டனர். இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார், இதற்கு முன்னர் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 போன்ற படங்களை இயக்கியவர்.
இப்படத்தின் கதைக்களம் இலங்கை அகதிகளாக சிறையில் சிக்கிக் கொண்டு, தவறே செய்யாமல் தப்பித்து செல்ல முயற்சிக்கும் இருவரை மையமாகக் கொண்டது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.