விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (L.I.K). இதில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக சீமான் நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் முக்கிய கதைக்கரு இணையதளத்தில் வெளியான தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, இந்த படத்தில் காதலுக்காக ஹீரோ டைம் டிராவல் செய்து எதிர்காலத்திற்குச் செல்லும் கதையாக உருவாக்கப்பட்டிருப்பதாக IMDb திரைப்பட தகவல் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை படக்குழு இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடாத நிலையில், IMDbவில் வந்த இந்த தகவல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது